அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவு
ADDED :1984 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ விழாவின் நிறைவு நாளை யொட்டி தாமரை குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளில் தாமரை குளக்கரையில் நடந்த பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.