உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கிரிவீதியில் பக்தர்கள் அவதி

பழநி கிரிவீதியில் பக்தர்கள் அவதி

பழநி : பழநி கிரிவீதியில் நிழற்குடை, பந்தல் இல்லாததால் வெயிலில் பக்தர்கள் அவதியுற்றனர்.

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு தரிசனத்திற்காக தினமும் பக்தர்கள் வருகை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கிரி வீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கோயில் சார்பில் பாத விநாயகர் கோயில் முதல் குடமுழுக்கு மண்டபம் வரை வெயிலின் தாக்கம் குறைய பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கிரிவீதியில் அதிக வெப்பத்தால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். ரோப் காருக்கு காத்திருக்கும் பக்தர்கள் இறுதியில் கடும் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சிரமத்தை தவிர்க்க கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !