விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :1704 days ago
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் திருவிழா மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கினர். தினமும் அம்மன் ,வெயிலுகந்தம்மனுடன் பல்வேறு மண்டகபடியில் எழுந்தருளினார்.பெண் பக்தர்கள் விழா துவங்கிய நாள் முதல் இரவு முழுவதும் குடங்களில் தண்ணீர் சேகரித்து கொடி மரத்திற்கு ஊற்றி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.