பகவதியம்மன் ஆலய திருப்பணி
ADDED :4868 days ago
பந்தலூர் : பந்தலூர் பகவதியம்மன் திருப்பணி நடந்தது. பந்தலூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதியம்மன் ஆலயத்தின் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா, ஆகம முறைப்படி திருக் கைப்பட்டா தந்திரி பணிகரன் தலைமையில்பூஜையுடன் நடந்தது. தொடர்ந்து கற்பக விநாயகர் கோவில் கட்டுமான பணிகளும் துவங்கியது. கோவில் கமிட்டி நிர்வாகிகள் சந்திரன், கிருஷ்ணகுமார், சங்கரலிங்கம், சிற்பி பிரபாகரன் மற்றும் பணிக்குழுவினர் பங்கேற்றனர்.