உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் திருவிழா வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுமா?

மானாமதுரையில் திருவிழா வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுமா?

 மானாமதுரை : மானாமதுரையில் சித்திரை திருவிழா துவங்கும் முன் வைகை ஆறு சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு வரும் 17 ந் தேதி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.திருவிழா நடைபெறும் 10 நாட்களின் போது வைகை ஆற்றுக்குள் தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்,மேலும் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினங்கள்,குழந்தைகள் விளையாட்டுக்கள், மற்றும் திருவிழா கடைகள் கோயிலுக்கு எதிரே வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும்.இந்தாண்டு திருவிழா ஆரம்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில்,பேரூராட்சி நிர்வாகம் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை துவக்காமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !