செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :1805 days ago
கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழாவையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருநாவுக்கரசர் குருபூஜை விழாவையொட்டி நடந்த நிகழ்வில், சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில், 8ம் திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும் அதிலுள்ள 658 பாடல்களையும் செம்பொற்சோதிநாதர் கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர்.ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதலில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.