அம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்
ADDED :1757 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கண்ணூர்பட்டி கோவில் திருவிழாவில், பெண்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த கண்ணூர்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடப்பது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 5ல் குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதியுலா, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் நடந்தது. பெண்களும், வருவான் வடிவேலன் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.