அம்மன் கோவில் மண்டல பூஜை
ADDED :1867 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. கடந்த, 31ல் கும்பாபிஷேக விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதன் மண்டல பூஜைகள் தினமும் நடந்து வருகின்றன. கட்டளைதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்படுகிறது.