கொத்தன்குளத்தில் சிறப்பு பூஜை
ADDED :1741 days ago
சிக்கல்: சிக்கல் அருகே கொத்தன்குளத்தில் நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி, சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. பங்குனி நிறைவு சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.