உலகளந்த பெருமாள் கோவிலில் ராமநவமி விழா
ADDED :1685 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி விழாவின் நான்காம் நாளான இன்று சீதா சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நான்காம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு, மூலவர் விஸ்வரூப தரிசனம், நித்திய பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, ராமர் சன்னதியில் சீதா சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமானுஜருருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, நான்காயிர திவ்ய பிரபந்தம், திருவாராதனம், சாற்றுமுறை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.