திருப்பரங்குன்றம் கோயிலில் காலணி பாதுகாப்புக்கு கட்டாய வசூல்!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க கட்டாய வசூல் செய்யப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணியை இலவசமாக பாதுகாக்க மகளிர் குழுவிற்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் கோயில் நிர்வாகம் வழங்குகிறது. ஆனால் காலணிகளை பாதுகாக்க சாதாரண நாட்களில் ஜோடிக்கு ஒரு ரூபாய், திருவிழா நாட்களில் ரூ. 5வரை கட்டாய படுத்தி வசூலிக்கின்றனர். இலவசம் தானே என்போரை ஏக வசனத்தில் திட்டுகின்றனர். கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவனிடம் கேட்டபோது, கட்டணம் வசூலிப்பது குறித்து, தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவர்களிடம் இதுபற்றி தெரிவித்து எழுதி வாங்கியுள்ளோம். தற்போதைய ஒப்பந்தம் ஜூன் 30ல் முடிகிறது. இனிவரும் காலங்களில் கோயில் நிர்வாகமே இலவசமாக பாதுகாத்து கொடுக்க முடிவு செய்து உள்ளது, என்றார்.