உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்வாமிகள் ஸ்ரீரங்கத்தில் அருளாசி!

சிருங்கேரி ஸ்வாமிகள் ஸ்ரீரங்கத்தில் அருளாசி!

திருச்சி: சிருங்கேரி சங்கர மடத்தின் 36வது மடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சிருங்கேரியை தலைமையிடமாக கொண்டு சிருங்கேரி சங்கர மடம் அமைந்துள்ளது. ஸ்ரீபாரதி தீர்த்த ஸ்வாமிகள் 36வது மடாதிபதியாக இருக்கிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் ஸ்ரீபாரதி தீர்த்த ஸ்வாமிகள், நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்துக்கு வருகை புரிந்தார்.அம்மா மண்டபத்தில் இருந்து சங்கர மடம் வரை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேள தாளத்துடன் பட்டின பிரவேசமாக அழைத்து வரப்பட்ட ஸ்வாமிகளுக்கு, மடத்தின் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மடத்தில் தங்கியிருந்து மாலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் ஸ்ரீபாரதி தீர்த்த ஸ்வாமிகள், தனது நித்யாராதன மூர்த்தியான சாரதா சந்திரமவுலீஸ்வரருக்கு நித்ய பூஜையை நடத்துகிறார். இன்று (11ம் தேதி) காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், நாளை (12ம் தேதி) திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜெம்புகேஸ்வரரையும் தரிசனம் செய்கிறார். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சிருங்கேரி சாரதா பீட நிர்வாகிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !