உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஐயப்பன் கோவிலில் முத்தங்கி சேவை

அன்னூர் ஐயப்பன் கோவிலில் முத்தங்கி சேவை

அன்னூர்: அன்னூர், ‌‌ஐயப்பன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி முத்தங்கி சேவை நடந்தது. அன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, காலை 8:30 மணிக்கு, அலங்கார பூஜை நடந்தது. முத்துக்களால் ஆன ஆடை அணிவிக்கப்பட்டு, ஐயப்பன் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று ஐயப்பனை முத்தங்கி சேவையில் தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !