நாச்சியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1676 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் அழகுநாச்சி அம்மன் ஆலயத்தில், சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு, காலை 10 மணி அளவில் மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.