யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் 27ல் கும்பாபிஷேக நிறைவு விழா
திருவண்ணாமலை: பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா இரண்டு நாட்கள் நடக்கின்றன. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம மகா கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா வரும், 27ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு ஹோமம், 10.45 மணிக்கு பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பக்தர்கள் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சென்னை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.45 மணிக்கு தஞ்சாவூர் ஜானகி சுப்ரமணியம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. 28ம் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 11.15 மணிக்கு, பக்தர்கள் பஜனை, மாலை 4 மணிக்கு யோகி ராம்சுரத்குமார் வித்யாலயா மாணவ, மாணவிகளின், "யோகியே தெய்வம் என்ற நாடகம், 5.15 மணிக்கு முரளீதர சுவாமிகள், பகவான் யோகி ராம்சுரத்குமார் உற்சவ மூர்த்திக்கு, தங்க கிரீடம் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.இதையடுத்து, "பரமாத்வாவுடன் ஆத்மாவின் சந்திப்பு என்ற பகவானின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை நித்யானந்த கிரி சுவாமிகள் வெளியிட, புத்தக ஆசிரியர் ரமாகாந்த் ராய் பெற்றுக் கொள்கிறார். மாலை 6 மணிக்கு, "பத்ராசல ராமதாசர் சரித்திரம் என்ற முரளீதர சுவாமிகளின் உபன்யாசமும், இரவு 8.15 மணிக்கு பகவான் வெள்ளி ரத உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.