பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :1736 days ago
வேலூர்: வேலூரில், பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. வேலூர் பிராமண சங்கம் சார்பில், பிலவ ஆண்டு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி, வேலூர் பேரிபேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வேலூர் கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. அத்திமலைப்பட்டு கணேச சாஸ்திரிகள் பஞ்சாங்கம் வாசித்தார். சங்க ஆலோசகர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் உமாபதி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன், சீனிவாசன், மகளிரணி நிர்வாகிகள் நிர்மலா, மரகதம், ஆகாஷ், செய்தி தொடர்பாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.