பால ஐயப்ப சுவாமிக்கு கனி அலங்காரம்
ADDED :1735 days ago
ப.வேலூர்: ப.வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ?கனி அலங்காரம் நடந்தது. ப.வேலூரில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, பால ஐயப்ப சுவாமி, நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பாண்டமங்கலம் பழைய மற்றும் புதிய சிவன் கோவில், பச்சமலை முருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷூவை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, கனி அலங்காரம் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.