அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்தம்
ADDED :1730 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவத்தை முன்னிட்டு, நேற்று சம்மந்த வினாயகர் சன்னதி அருகே பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இவ்விழாவானது நேற்று சம்மந்த வினாயகர் சன்னதி அருகே பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவத்தில், மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். விழாவின் நிறைவாக அய்யங்குளத்தில் சுவாமியின் தீர்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் மற்றும் அண்ணாமலையார் கோயில் கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.