நீலமங்கலம் கோவிலில் ராகுகால சிறப்பு பூஜை
ADDED :1640 days ago
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சிவன் கோவிலில் துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜைகள் நேற்று நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ராகுகால துர்கா பூஜைகள் 12ம் ஆண்டு பூர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுடன் நேற்று நடந்தது. இதில் துர்கையம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழவகைகள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசிக்கப்பட்டு, மகாதீபாரதனை நடந்தது. பெண்கள் பலர் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபட்டனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.