ஒதியம்பட்டு சற்குரு மகான் வண்ணார பரதேஸ்வர சுவாமி குரு பூஜை
ADDED :1741 days ago
வில்லியனுார்:ஒதியம்பட்டு சற்குரு மகான் வண்ணார பரதேஸ்வர சுவாமி குரு பூஜை விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் சற்குரு மகான் வண்ணார பரதேஸ்வர சுவாமிகள் ஜீவசமாதி சித்தர் பீடத்தில் 229ம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று காலை கோ பூஜையுடன் துவங்கியது. நேற்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆன்மிக வழிபாட்டு சபை சார்பில் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பால் குடம், புனித நீர் கொண்டுவரப்பட்டது. பகல் 12:30 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.