கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :1 hours ago
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் இன்று காலை 9 மணி அளவில் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலை பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இரவு உற்சவமூர்த்தி காமாட்சி அம்மன் சுவாமிகள் வீதி உலா வந்தது.இதில் கண்டாச்சிபுரம் மடவிளாகம், அங்கு ராயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.