திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
ADDED :46 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. சிநேகவல்லி அம்மன் அமர்ந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தேர் புறப்பட்டு வடக்குரத வீதி வழியாக சென்ற போது மழை பெய்யத் துவங்கியது. இருந்த போதும் பக்தர்கள் ஓம் சக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய இடங்களில் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் சிலர் வழங்கினர். ஆக.,16ல் திருக் கல்யாணம் நடக்கிறது.