உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடத்தில் 43ம் ஆண்டு திருவிழா துவக்கம்

ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடத்தில் 43ம் ஆண்டு திருவிழா துவக்கம்

ஜீவன் பீமா நகர்: பெங்களூரு ஜீவன் பீமா நகரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் சக்தி பீடம் கோவிலின், 43ம் ஆண்டு விழா, பூக்கரகம், 72 அடி உயர ரத உத்சவ விழா, 8,001 லிட்டர் பால் அபிஷேகம், இலவச திருமண விழா இன்று துவங்குகிறது.


இன்று காலை கங்கன பூஜை, மஹா மங்களாரத்தி, 15ல் காலை முதல் இரவு வரை 8,001 லிட்டர் பால் குட ஊர்வலம், அபிஷேகம்; 16 காலையில் அம்பலி சேவை ஊர்வலம்; 17 காலையில் சிறப்பு பூஜை, அலங்காரம், மஹா மங்களாரத்தி. வரும் 18 மாலையில் ஆதிபராசக்தி அம்மன் பூக்கரக ஊர்வலம்; 19 காலையில் சிறப்பு பூஜை, அலங்காரம், மஹா மங்களாரத்தி; 20 காலையில் 11ம் ஆண்டு ஷீரடி சாய்பாபா ஆண்டு விழாவை ஒட்டி, ஹோம பூஜை, பிரசாதம் வழங்கல்; மாலையில் அய்யப்பன் பஜனை மண்டலி சார்பில் சாய்பஜன். வரும், 21ல் வரமஹாலட்சுமி திருவிழாவை ஒட்டி, சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்; 22 காலையில் சிறப்பு பூஜை, அலங்காரம், மஹா மங்களாரத்தி; 23ல் காலையில் இலவச திருமணம், சஷ்டி பூஜை, 72 அடி உயர தேர் பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர், எல்.வி.நாராயணப்பா தலைமையில் குழுவினர் செய்து உள்ளனர். மேலும் விபரங்களுக்கு 94480 41928 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !