தேவநாதசுவாமி கோவிலில் 21ல் ராமநவமி உற்சவம்
ADDED :1648 days ago
கடலுார் : கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம் நடக்கிறது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் விமர்சையாக நடக்கிறது. இந்தாண்டு உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. அதையொட்டி, ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று ஸ்ரீராமன், சீதா சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி உற்சவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.