உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மகா காளியம்மன் சிறப்பு பூஜை

உஜ்ஜயினி மகா காளியம்மன் சிறப்பு பூஜை

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை உஜ்ஜயினி மகா காளியம்மன் சித்திரை மாத சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் உஜ்ஜயினி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி ஆகியவற்றால், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளியம்மாள் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !