எமனேஸ்வரம் குருநாதன் கோயிலில் பாலாலய விழா
ADDED :1673 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலயம் செய்யப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் நிறைவுபெற்று, நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து புனித தீர்த்தக் குளங்கள் புறப்பாடாகி, விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி, குருநாதசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.