உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர் : கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி கோமளவல்லி, விஜயவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் பல்வேறு வாகனங்களில் வரும் 28ம் தேதி வரை சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்.26ம் தேதி நடைபெற விருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !