பாவம் செய்யாதீர்
ADDED :1690 days ago
மற்றவருக்கு தீங்கு செய்தால் மனசாட்சி உறுத்த வேண்டும். நடுநிலையுடன் சிந்தித்து தனக்கு தானே நீதிபதியாக தண்டனை கொடுக்க வேண்டும். செய்த தவறுக்கு பிராயசித்தமாக பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் நல்லநிலைக்கு உருவாக்க கைகொடுக்க வேண்டும்.
பாவங்களை மறைப்பவன் நல்வாழ்வு பெற மாட்டான். அவற்றை அறிக்கை செய்து ஆண்டவரிடம் ஒப்புக் கொடுப்பவனோ இரக்கம் பெறுவான் என்கிறது பைபிள்.
உலக வாழ்வு நிலையற்றது. சிற்றின்பத்தை தேடி அலைவது. செல்வம், புகழ், பெருமை, தற்காலிக இன்பத்தை நாடுவது. இப்படிப்பட்ட உலக சிந்தனை ஆண்டவருக்கு விரோதமானது. பாவத்தை புறக்கணித்து எப்போதும் நல்லதைச் சிந்திப்போம்.