மகப்பேறு தரும் குழந்தை சிவன்
ADDED :1690 days ago
குடும்பம் விளங்க ஒரு குழந்தை இல்லையே என ஏங்குவோர் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் குறை போக்கி மகப்பேறு அளிக்கும் தலமாக தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சந்தான சுந்தரேஸ்வரரை தம்பதியராக வழிபட்டு பரிகார பூஜை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
மகப்பேறு அருளும் சந்தான சுந்தரேஸ்வரர் என்னும் குழந்தை சிவன் இக்கோயிலில் இருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள் இவரை சிவாச்சாரியார் மூலம் பெற்று மனைவியின் மடியில் வைத்து பிரார்த்திக்க வேண்டும். பின்னர் தொட்டிலில் இட்டு தாலாட்ட வேண்டும். இதுவே முதல் கட்ட பரிகாரம். இதன்பின் வேண்டுதல் நிறைவேறி மகப்பேறு கிடைத்ததும், ஓராண்டுக்குள் குழந்தையுடன் கோயிலுக்கு வர வேண்டும். மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டிலில் குழந்தையை கிடத்தி நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இதுவே இரண்டாம் கட்ட பரிகாரம். இந்த பரிகார பூஜைகள் தினமும் காலை 9:00 – 10:30 மணி, மாலை 6:30 – 7:30 மணிக்குள் நடக்கும். சனிக்கிழமை காலையில் ராகுகாலம் என்பதால் பரிகார பூஜை கிடையாது.
1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் ஞானசம்பந்தர் தேவாரத்தில் வைப்பு தலமாக உள்ளது. சிதிலமாகி நுாறாண்டுக்கும் மேலாக பூஜையின்றிக் கிடந்த இக்கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டுள்ளது.
எப்படி செல்வது: தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் 14 கி.மீ,