திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதுார் வாங்க!
ADDED :1690 days ago
ஜாதக ரீதியாக கிரகநிலை உங்களுக்கு சரியில்லையா... திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடுகிறதா... உங்களுக்கு நல்ல தீர்வு தரக் காத்திருக்கிறார் திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி. ஏப்.24ல் இங்கு நடக்கும் மகாபிரதோஷ விழாவில் பங்கேற்று பலன் பெறுங்கள்.
இக்கோயிலில் ஏப்.24 ல் மகாபிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கிறது. அப்போது ராஜ கோபுர திருப்பணிக்கான வேண்டுதல் விழாவை மகாராஷ்டிரா ேஷகான் சத்குரு ஸ்ரீகஜானன் மஹராஜ் ஆசியுடன் பக்தர்கள் நடத்தவுள்ளனர். புதிய முயற்சியாக கோயிலின் தலவரலாற்றை ஒரு காட்சியாக (Set) முன்னனி கலை இயக்குநரின் கை வண்ணத்தில் உருவாக்க உள்ளனர்.
பிரதோஷ பூஜையில் மாலை 4:30 மணிக்கு அபிேஷகம் நடக்கும். அப்போது சுவாமி, அம்மன், நந்திகேஸ்வரருக்கு 3024 (1008,1008,1008) செவ்விளநீர் அபிேஷகம் நடக்கும். பின்னர் செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை பூக்களால் சுவாமி, அம்மனை அலங்காரம் செய்வர். மாலை 5:30 மணிக்கு 31 விளக்குகளுக்கு ஒருநபர் வீதம் 324 நபர்கள் கோயில் முழுவதும் 10008 விளக்குகளை ஒரே நேரத்தில் ஏற்றுவர். சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூன்று முறை 10008 தீப ஒளிக்கு நடுவில் பவனி வருவர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் தோஷம் விலகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை பேப்பரில் எழுதி வந்து சுவாமி சன்னதியில் இருந்து கீழே இறங்கும் வழியில் உள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தலாம்.
வீரவநல்லார், முக்கூடலில் இருந்து கோயிலுக்குச் செல்ல மதியம் 2:00 மணி முதல் இலவசப் பேருந்து இயக்கப்படுகிறது.
எப்படி செல்வது
திருநெல்வேலி – பாபநாசம் சாலையில் 28 கி.மீ., துாரத்தில் வீரவநல்லுார். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ.,