மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1623 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1623 days ago
பரமக்குடி: ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது. பரமக்குடி, எமனேஸ்வரம் அனுமார் கோயில்களில் ராமநவமி விழா நடந்து வருகிறது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 28 ஆம் ஆண்டு ராமநவமி விழாவையொட்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டுவோர் யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் மூலவர் மற்றும் உற்சவர் களுக்கு 13 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் இசைக்குழுவினர் இது நாம சங்கீர்த்தனம் பஜனை நடந்தது. இன்று காலை ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1623 days ago
1623 days ago