சொக்கையா சுவாமி கோவிலில் குருபூஜை
ADDED :1627 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி சொக்கையா சுவாமிகள் மடத்தில் 82வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்காபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார் ராஜ சண்முகம் சுவாமிக்கு சந்தனக்காப்பு, முருகனுக்கு திருநீர், விநாயகருக்கு திரவிய அலங்காரம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.