உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் மழை வேண்டி பூஜை

விநாயகர் கோவிலில் மழை வேண்டி பூஜை

பெ.நா.பாளையம்: கொட்டவாடி வெள்ளக்குட்டி கரடு, விநாயகர் கோவிலில் மழை வர வேண்டியும், கொரோனா நோய் தொற்று விலகி ஊர் மக்கள் நன்மை பெறவும், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஊர் மக்கள் சுபிட்சம் பெற்று, அனைத்து செல்வங்கள் கிடைக்க வேண்டி நேற்று பகல் 1:00 மணிக்கு மேல், மூலவருக்கு பால், இளநீர், திருமஞ்சனம், பன்னீர், தேன் மற்றும் பழவகைகளால் அபி?ஷகம் நடந்தது. பின், சர்க்கரை பொங்கல், சுண்டல் படையல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாழப்பாடி, கொட்டவாடி, பேளூர், கரடிப்பட்டி, புளப்பன்குட்டை ஓடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !