உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு தடை

தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு தடை

அரூர்: கொரோனா பரவலால், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரூர் அடுத்த தீர்த்த மலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, கடந்த, 17, முதல், அப்பகுதி பஞ்., நிர்வாகத்தின் சார்பில், தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, சுவாமிக்கு அனைத்து பூஜைகளும் நடக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !