உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி : திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு ராகுகால சிறப்பு பூஜையும் நடந்தது. அப்போது, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !