ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி
ADDED :1744 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி உற்சவம் சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு ராமர் சன்னதியில், ராமர், சீதை, லட்சுமணருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.