பாலமேடு கோயில் உற்சவ விழா
ADDED :1723 days ago
பாலமேடு: பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டி மாரியம்மன் கோயில் 5ம் ஆண்டு உற்சவ விழா மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.அம்மனுக்கு பூங்கரகம் ஜோடித்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.பக்தர்கள் பொங்கல் வைத்தும்,பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயசந்திரன் மற்றும் கிரமத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.