உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை சிவன் கோயிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம்

தேவகோட்டை சிவன் கோயிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம்

 தேவகோட்டை : தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சித்திரை திருவிழா 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்தனர். நேற்று முன்தினம் இரவு சுந்தரேஸ்வரருக்கும் மீனாட்சி அம்மனுக்கும், பெருமாள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !