உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பொங்கல் விழா

தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பொங்கல் விழா

மானாமதுரை; மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கடந்த கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக சபரிமலை சென்று வந்ததை தொடர்ந்து பொங்கல் விழாவன்று அதிகாலை தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தினர். வெள்ளிகவசத்துடன் காட்சி அளித்த ஐயப்பனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள், பூஜை, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாட்டை ஐயப்ப குருசாமிதலைமையில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !