உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி விழா: கோயிலுக்குள் சவுந்தரராஜ பெருமாள் வீதியுலா

சித்ரா பவுர்ணமி விழா: கோயிலுக்குள் சவுந்தரராஜ பெருமாள் வீதியுலா

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்குள் மட்டும் வீதியுலா நடக்கிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் பால்கேணிமேடு சென்று மண்டூக முனிவருக்கு பெருமாள் வரம் அளிப்பார். தொடர்ந்து நகரின் பல்வேறு திருக்கண்களில் 3 நாட்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கோயில் வளாகத்திற்குள் மட்டும் நடக்கிறது. 3 நாட்களில் முறையே குதிரை, கருட, சேஷ வாகனங்களில் சுவாமி வீதியுலா கோயில் வளாகத்திற்குள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !