உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் கோயிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை

மதுரை கூடலழகர் கோயிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தமிழ் பிலவ ஆண்டை முன்னிட்டு, சித்திரை மாதத்தில் வந்த, சுக்லபட்ச ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜைகள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு ஊஞ்சல் சேவையில் மதுரவல்லி தாயாருடன் வியூக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !