திண்டிவனத்தில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :1834 days ago
திண்டிவனம்: சனிப்பிரதோஷத்தையொட்டி, திண்டிவனம், திந்திரிணீஸ்வர் கோவிலில், பக்தர்கள் பூசணிக்காய், அகல் விளக்கேற்றி வழிபாட்டனர்.
பிரதோஷத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் சனி பிரதோஷ தினமான நேற்று, திண்டிவனத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதேபோல் திண்டிவனத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திந்திரிணீஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 11 பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து அபிஷேகம் முடிந்த பின் சிறப்பு அலங்காரத்தில் மரகதாம்பிகைவுடன் உற்சவர் திந்திரிணீஸ்வர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.