உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூர் தைக்கால் கொடி கம்பம் சேதம்

நாகூர் தைக்கால் கொடி கம்பம் சேதம்

 நாகப்பட்டினம்;நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் தைக்காலில் இருந்த கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை அடுத்த காடம்பாடியில் நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். அங்குள்ள கொடி கம்பத்தை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தியுள்ளனர். இரும்பாலான கொடிமரம் அடியோடு பெயர்த்து எடுத்து அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர்.தைக்கால் அறக்கட்டளை அறங்காவலர் நவாப்ஜான் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !