மதுரை சித்திரைத் திருவிழா: கோயில் வளாகத்தில் கள்ளழகர் எதிர்சேவை
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் எதிர்சேவை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் ஏப்.,27 ல் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. கள்ளழகர் அலங்காரத்தில் எதிர்சேவை இன்று காலை 9:15 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நாளை (ஏப்.27) ஆடி வீதியில் நடக்கிறது.
நிகழ்ச்சிகளை Live:https://www.youtube.com/watch?v=mjxmiSjoLn8,
https://www.dinamalar.com/video_main.asp?news_id=2409&cat=live மூலமாகவும் காணலாம்.