கள்ளழகர் சேவையில் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் வலம்
ADDED :1712 days ago
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இக்கோயிலில் ஏப்., 22-ல் காப்பு கட்டப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் பெருமாள் கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார். தொடர்ந்து கொரோனா அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து நிகழ்வுகளும் உள் விழாவாக நடந்து வருகிறது.மேலும் இன்று காலை கும்ப திருமஞ்சனமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே விழா நடக்க உள்ளது.