மதுரை சித்திரை திருவிழா: சட்டத்தேரில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ADDED :1721 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா 11ம் நாளான நேற்று சட்டத் தேரில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தளி அருள்பாலித்தனர்.
இத்திருவிழா ஏப்.,15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 26 வரை கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் குறிப்பிட்ட நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.,24ல் நடந்தது. கோயில் வெப்சைட், யூடியூப் மூலம் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். விழாவின் 11ம் நாளான நேற்று ஆடி வீதியில் சட்டத்தேரில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தளி அருள்பாலித்தனர்.