உத்தரகோசமங்கையில் பக்தர்கள் இன்றி நடந்த திருக்கல்யாணம்
ADDED :1725 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று மாலை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் திருக்கல்யாணம் நடந்தது.
கொரோனா முழு ஊரடங்கை முன்னிட்டு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. மலர் அலங்காரம் செய்யப்பட்ட மண்டபத்தில் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார் மங்கல நாணை பூட்டினார். இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாளுக்கு பள்ளியறை பூஜை நடந்தது. மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.