சித்திரை பவுர்ணமி: எமதர்மர் கோயிலில் வழிபாடு
ADDED :1727 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில் உள்ள, எமதர்மர் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை நாளில், சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடும், பூஜையும் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர், ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர் எமதர்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார பூஜையும் செய்யப்பட்டன. இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.