பாலமுருகன் கோவிலில் அபிஷேக ஆராதனை
ADDED :1629 days ago
புதுச்சத்திரம் : பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் செடல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக செடல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது.சித்ரா பவுர்ணமியான நேற்று காலை 7:00 மணியளவில் பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி கோவிலைச்சுற்றி வலம் வந்து, காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.