உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் வரம் கிடைக்கும்!

சஷ்டி விரதம்: முருகனை வழிபட வேண்டும் வரம் கிடைக்கும்!

முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் தீரும்.


முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். குழந்தைப்பேறு உண்டாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம். கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேற்றி வைப்பார் வேலவன்! இன்று முருகனை வழிபட நினைத்தது நிறைவேறும்.. நிம்மதி பிறக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !